உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மடப்புரத்தில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசித்த பக்தர்கள்

மடப்புரத்தில் 2 மணி நேரம் காத்திருந்து தரிசித்த பக்தர்கள்

திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனை இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து சென்றனர். பக்தர்களுக்காக ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வைக்கப்பட்டது. வெயில் காரணமாக சிமென்ட் தளம் சூடாகி விடுவதை தடுக்க அடிக்கடி தண்ணீர் தெளிக்கப்பட்டது. மதியம் ஒரு மணி உச்சிக்கால பூஜையில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடு வசதிகளை கோயில் உதவி ஆணையர் கணபதி முருகன், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை