பஸ்சில் விழுந்து பலி
திருப்புத்துார் : திருப்புத்துார் பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தனியார் பஸ் பயணிகளை இறக்கி விட்டு திண்டுக்கல்லுக்கு புறப்பட்டது. அப்போது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் மனநலம் இல்லாத ஒருவர் பஸ் முன் குதித்தார். அதில் பஸ் சக்கரம் அவரது தலையில் ஏறியதில் அதே இடத்தில் இறந்தார். 45 வயதான இறந்தவரின் விபரம் தெரியவில்லை.