மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் சங்க ஆர்ப்பாட்டம்
24-Oct-2025
சிவகங்கை: தேவகோட்டையில் மாற்றுத்திறனாளி அனைத்துறை ஊழியர், ஆசிரியர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் திருமுருகன் முன்னிலை வகித்தார். வட்டார தலைவர் வள்ளியப்பன், செயலாளர் ராமு, பொருளாளர் முத்துமாரி, மாநில தொழில்நுட்ப பிரிவு பலராமன், மாவட்ட துணை தலைவர்கள் அரியக்குமார், பூமிராஜ், மாவட்ட இணை செயலாளர் வள்ளியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினர்கள் பூமிநாதன், சுலக்சனா, கிருஷ்ணமூர்த்தி, ஐஸ்வர்யா பங்கேற்றனர். கூட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சாய்தளம் அமைத்து அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். பதவி உயர்விற்கு வழங்கப்பட்ட 4 சதவீத இட ஒதுக்கீட்டின்படி மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் பதவி உயர்வு தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். மாவட்ட பொருளாளர் மாயாண்டி நன்றி கூறினார்.
24-Oct-2025