உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கூட்டுறவு வங்கிகள் மூலம் நகை  கடன் ரூ.335 கோடி வழங்கல் 

கூட்டுறவு வங்கிகள் மூலம் நகை  கடன் ரூ.335 கோடி வழங்கல் 

சிவகங்கை: மத்திய கூட்டுறவு வங்கிகள், ''தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் நகை அடமானத்தின் பேரில் ரூ.335 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் 32 வங்கி கிளைகள் உள்ளன. அதே போன்று 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இந்த வங்கிகள் மூலம் தொழில் முனைவோர், மகளிர் குழுக்கள், கல்வி கடன் வழங்கப்படுகின்றன. நகை அடமானத்தின் பேரில் விவசாய பயன்பாடு, பொது பயன்பாட்டிற்காக வாடிக்கையாளர்கள் கடன் பெறுகின்றனர். 2025- 2026 ம் ஆண்டிற்கு மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நகை அடமானத்தின் பேரில் ரூ.968 கோடி வரை கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். அதில், 2025 ஏப்., முதல் ஜூலை வரை மாவட்ட அளவில் அனைத்து மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 335 கோடி வரை கடன் வழங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ