மேலும் செய்திகள்
மணல் கடத்தலில் ஈடுபட்ட சரக்கு வாகனம் பறிமுதல்
17-Jun-2025
கண்டவராயன்பட்டி : திருப்புத்தூர் அருகே பாலாற்றில் அனுமதியின்றி மணல் கடத்தியதாக தி.மு.க., விவசாய அணி துணை அமைப்பாளர் உட்பட 2 பேர்களை போலீசார் கைது செய்தனர். திருப்புத்துார் அருகே பாலாறு செல்லும் மாங்குடி பகுதியில் தனியார் நிலத்தில் அனுமதியின்றி மணல் எடுத்து கடத்துவதாக போலீசாருக்கு புகார் சென்றது. போலீசார் அங்கு ரோந்து சென்று, மண் அள்ளும் இயந்திரம் மூலம் லாரியில் மணல் கடத்திய தி.மு.க., விவசாய அணி துணை அமைப்பாளர் முருகன் 55, திருக்களாப்பட்டி சந்தோஷ் 22, ஆகிய இருவரையும் கைது செய்து, மண் அள்ளும் இயந்திரம், லாரியை கண்டவராயன்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர். ///
17-Jun-2025