மருத்துவர்கள் தினம்
மானாமதுரை : மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் மருத்துவர்கள் தின விழாவை முன்னிட்டு தாளாளர் கபிலன், நிர்வாகி மீனாட்சி, முதல்வர் சாரதா ஆகியோர் மருத்துவர்களின் சேவை குறித்து பேசினர். ஆசிரியர்களும்,மாணவர்களும் மானாமதுரை அரசு மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.