உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிங்கம்புணரியில் சிங்கம் நடமாட்டமா

சிங்கம்புணரியில் சிங்கம் நடமாட்டமா

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் பெட்ரோல் பங்க் ஒன்றில் சிங்கம் நடமாடுவதாக வதந்தி பரப்பப்படும் நிலையில் பொதுமக்கள் அச்சத்துக்குள்ளாகி வருகின்றனர்.சமூக ஊடகங்களில் வரும் பழைய மற்றும் போலியான தகவல்களை சிலர் அவ்வப்போது மீண்டும் வதந்தியாக பரப்பி பலரையும் பீதிக்கு உள்ளாக்குகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன்பு வட மாநிலம் ஒன்றில் பெட்ரோல் பங்க் அருகே சிங்கம் நடமாடுவதாக வீடியோ ஒன்று பரவியது. தற்போது இந்த வீடியோவை சிங்கம்புணரியை சேர்ந்த சிலர் எடிட் செய்து சிங்கம்புணரியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நடமாடுவதாக வதந்தி பரப்பி வருகின்றனர்.இதை வதந்தி என அறியாத பலரும் அதை பகிர்ந்து வருவதுடன், பெண்கள், சிறுவர்கள் அதிர்ச்சிக்கும் பயத்துக்கும் உள்ளாகி வருகின்றனர்.சிங்கம்புணரி மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இதே வீடியோவை அந்தந்த ஊர்களின் பெயரில் வதந்தியாக பரப்பி வருகின்றனர்.வதந்தி பரப்புவது சட்டப்படி குற்றம் என்றாலும் அதை பற்றி புரிதல் இல்லாமல் படித்தவர்கள் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களும் கூட அதை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் மக்களை அச்சுறுத்தும் விதமாக வதந்தி பரப்புவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி