உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  தொடர் மழையால் ஏ.டி.எம்.,களில் தஞ்சம் புகுந்த நாய், மாடு

 தொடர் மழையால் ஏ.டி.எம்.,களில் தஞ்சம் புகுந்த நாய், மாடு

திருப்புவனம்: திருப்புவனத்தில் தொடர் மழை காரணமாக ஏ.டி.எம்., மையங்களில் நாய், பூனை, மாடு உள்ளிட்டவை தஞ்சமடைவதால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் அச்சத்துடன் உள்ளனர். திருப்புவனத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற் பட்டவர்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிகின்றனர். மாதம்தோறும் சம்பளம் மற்றும் இதர வருவாய் அனைத்தும் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. எனவே தேவைக்கு ஏற்ப பணம் எடுக்க வங்கி ஏ.டி.எம்., மையங்களையே பொதுமக்கள் நாடுகின்றனர். திருப்பு வனத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்கள் ஐந்திற்கும் மேற்பட்டவை உள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதாலும் 24 மணி நேரமும் ஆட்கள் நடமாட்டம் இருப்பதால் ஏ.டி.எம்., காவலாளி இல்லை. தற்போது இரு நாட்களுக்கும் மேலாக சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ச்சியான மழை காரணமாக தரை முழு வதும் ஈரமாக இருப்பதால் நகரில் வலம் வரும் கோயில் மாடுகள், தெரு நாய்களுக்கு தங்குமிடம் இல்லை. எனவே அவை அந்தந்த பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்., மையங்களில் தஞ்சம் புகுந்து விடு கின்றன. நாள் முழுவதும் ஏ.டி.எம்., மையங்களிலேயே இருப்பதால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
நவ 25, 2025 08:36

பேங்க் காரங்க கிட்டே சொல்லிராதீங்க. அதுங்க கிட்டேயும் காசு வசூல்.பண்ண ஆரமிச்சுருவாங்க.


மேலும் செய்திகள்