உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்பாச்சேத்தியில் நாய்கள் தொல்லை

திருப்பாச்சேத்தியில் நாய்கள் தொல்லை

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தியில் தெரு நாய்கள் தொல்லையால் வெளியே நடமாட முடியாமல் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். திருப்பாச்சேத்தியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. திருப்பாச்சேத்தியில் அரசு மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, தனியார் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயில்கின்றனர். சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வாகனங்களில் மாணவ, மாணவியர் வந்து செல்கின்றனர். படமாத்தூர் ரோடு, பஸ் ஸ்டாப் உள்ளிட்ட இடங்களில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக வலம் வருகின்றன. சிறுவர்,சிறுமியர்கள் தனியாக நடந்து செல்ல முடியவில்லை. திருப்பாச்சேத்தியில் கடந்த ஒரு மாதத்தில் 10க்கும் மேற்பட்டோர் நாய்க்கடிபட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். திருப்பாச்சேத்தி உள்ளிட்ட கிராமப்புறங்களில் பெற்றோர் கூலி வேலைக்கு சென்று விட சிறுவர், சிறுமியர் மட்டும் தனியாக பள்ளிக்கு வருவது வழக்கம், தெரு நாய்கள் தொல்லையால் பெற்றோர்கள் பள்ளி வரை மாணவ, மாணவியர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து விட்டு செல்கின்றனர். தெரு நாய்களை அப்புறப்படுத்த எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை