உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பொது அறிவு, ஆசிரியர் அறிவுரையுடன் வெளிவரும் தினமலர் பட்டம் இதழ் மாணவர்களுக்கு டாக்டர். பிரபு அறிவுரை

பொது அறிவு, ஆசிரியர் அறிவுரையுடன் வெளிவரும் தினமலர் பட்டம் இதழ் மாணவர்களுக்கு டாக்டர். பிரபு அறிவுரை

காரைக்குடி:காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழை பிரபு டென்டல் மருத்துவமனை நிறுவனர் டாக்டர்.பிரபு வழங்கினார். தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார்.டாக்டர். பிரபு மாணவர்களிடம் கூறும்போது: மாணவர்களுக்கு கற்றல் மிக முக்கியம். பொது அறிவிலும் சிறந்தவர்களாக மாணவர்கள் விளங்க வேண்டும். பொது அறிவு இருந்தால் மட்டுமே, அரசுத் துறை பதவியில் அங்கம் வகிக்க முடியும். வாசிப்புத் திறனை மேம்படுத்த நாள்தோறும் செய்தித்தாள் படிக்க வேண்டும். மாணவர்கள் செய்தித்தாள் படிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் மாணவர்களை தேடி செய்தியுடன், பொதுஅறிவு, அறிவியல் கண்டுபிடிப்பு, கணிதம், ஆசிரியர்களின் அறிவுரை, தொழில்நுட்பம் என பல தகவல்களுடன் பட்டம் நாளிதழை தினமலர் வழங்கி வருகிறது. இதனை படிக்கத் தொடங்கினால் பள்ளிப் பாடப் புத்தகங்களையும் ஆர்வத்துடன் படிக்க முடியும். நடுத்தர, ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த பட்டம் இதழை மாணவர்களுக்கு வழங்கி உள்ளேன்.இதனை பயன்படுத்தி,படித்து அறிவுக் களஞ்சியமாக வாழ்க்கையில் உயர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ