உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வசூல் பணம் வழிப்பறி டிரைவர் கைது

வசூல் பணம் வழிப்பறி டிரைவர் கைது

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே வசூல் பணத்தை ஆள் வைத்துக் கொள்ளையடித்து விட்டு, வழிப்பறி நடந்ததாக நாடகமாடிய டிரைவர் கைதானார். மதுரை மாவட்டம் ஐராவதநல்லுார் எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்தவர் வேலு மகன் தங்கபாண்டி 30. இவர் மதுரையில் கடலை மிட்டாய் தயாரிக்கும் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்க்கிறார். அக். 17ஆம் தேதி திருப்புத்துாரில் இருந்து கடலை மிட்டாய் விற்பனை பணத்தை வசூலித்து திரும்பியபோது, எஸ்.எஸ்.கோட்டை அருகே சிலர் தங்கள் கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளை அடித்துச் சென்றதாக போலீசில் புகார் செய்தார். எஸ்.எஸ்.கோட்டை போலீசார் விசாரணை நடத்தியதில், டிரைவர் தங்கபாண்டியனே தனது நண்பர்களை வைத்து பணத்தை கொள்ளையடித்துவிட்டு நாடகம் ஆடியது தெரிந்தது. இதைத்தொடர்ந்து டிரைவர் தங்கபாண்டி, மேலுார் எட்டிமங்கலம் சந்தோைஷ 21, எஸ்.எஸ்.கோட்டை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை