போதை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
குன்றக்குடி: குன்றக்குடி அருகே நேமத்தில் அ.தி.மு.க., சார்பில் போதை விழிப்புணர்வை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். வயது 14 க்கு உட்பட்ட மற்றும் அனைவருக்கும் என்ற வகையில் இரு விதமாக ஓட்டம் நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் வென்றவர்களுக்கு சான்று, கேடயம், பதக்கம், ரொக்க பரிசு வழங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ.,உமாதேவன், மாநில பாசறை துணை செயலாளர் பார்த்திபன், பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், மாவட்ட பாசறை செயலாளர் பிரபு, சாக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் சிங்கம்புணரி ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு பங்கேற்றனர். வயது 14 க்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம் இசக்கிமுத்து, இரண்டாம் இடம் காஞ்சிபுரம் கிேஷார், மூன்றாம் இடம் மோனஸ்குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். பொது பிரிவினருக்கானபோட்டியில் கோயம்புத்துார் சதீஷ் குமார், காஞ்சிபுரம் சுகுமார், லோகநாதன் வெற்றி பெற்றனர்.