உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்காணிப்பை மீறியும் மருத்துவமனை வளாகத்தில் குடிகாரர்கள் நடமாட்டம்

கண்காணிப்பை மீறியும் மருத்துவமனை வளாகத்தில் குடிகாரர்கள் நடமாட்டம்

சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி வளாகம் இரவு நேரத்தில் மது பிரியர்களின் கூடாரமாக மாறுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு, மகப்பேறு, குழந்தைகள்நலப்பிரிவு, புற நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பிரிவு செயல்படுகிறது. மருத்துவமனைக்கு 24 மணிநேரமும்சிகிச்சைக்கு நோயாளிகள் வருகின்றனர். மருத்துவமனை வளாகம் இரவு நேரங்களில் மதுபிரியர்களின் கூடரமாக மாறி வருவதாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தெரிவிக்கின்றனர். கடந்தசில மாதங்களுக்கு முன்பு தான் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் பெண் பயிற்சி டாக்டர் ஒருவரைபணி முடிந்து செல்லும்போது போதையில் ஒருவர் தாக்கிய சம்பவம் நடந்தது. அதற்கு பிறகு கல்லுாரிமருத்துவமனை வளாகம் முழுவதும் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் கல்லுாரி வளாகம் மருத்துவமனை இடைபட்ட பகுதியான மாற்றுத்திறனாளி நலத்துறை உரிமைகள்திட்ட கட்டடம் அருகே இரவு நேரத்தில் அடிக்கடி சிலர் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை விட்டுசெல்வதாக மருத்துவ பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவமனையில் உள்ள போலீசார்இரவு நேரத்தில் வளாகத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ