உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விதிகளை மீறி செயல்படும் சாயப்பட்டறைகள்

விதிகளை மீறி செயல்படும் சாயப்பட்டறைகள்

கீழடி: கீழடி அருகே புலியூர், பொட்டப்பாளையம், கரிசல்குளம், சயனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விதிகளை மீறி சாயப்பட்டறைகள், தொழிற்சாலைகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சிவகங்கை மாவட்ட எல்லையான புலியூர், சயனாபுரம், பொட்டப்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் மதுரை நகருக்கு அருகாமையில் அமைந்துள்ளன. மதுரை - அருப்புக்கோட்டை நான்கு வழிச்சாலை அருகே புலியூர் அமைந்திருப்பதால் பலரும் தொழிற்சாலைகளை அமைத்து வருகின்றனர். புலியூர்,சயனாபுரம், காஞ்சிரங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பத்திற்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள், சாயப்பட்டறைகள், கெமிக்கல் தொழிற்சாலைகள், கரி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. ஒருசில தொழிற்சாலைகள் தவிர மற்ற தொழிற்சாலைகளுக்கு பெயர் பலகை கூட இல்லை. பெயர்பலகை இருந்தாலும் அதனை பின்புறமாக அமைத்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அமைந்திருந்தாலும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. காரணம் தொழிற்சாலைகளுக்கு மதுரை ரிங்ரோடு, சிந்தாமணி வழியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும். திருப்புவனத்தில் இருந்து செல்வது என்றால் கீழடி, கொந்தகை, பாட்டம், பொட்டப்பாளையம் என சுற்றி செல்ல வேண்டும், இதனாலேயே தொழிற்சாலைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதில்லை.அதிகாரிகள் ஆய்விற்கு செல்லாததால் தொழிற்சாலை விதிகள் காற்றில் பறக்க விட்டு செயல்படுகின்றன. தொழிற்சாலைகளில் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுவதில்லை. தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளும் செய்யப்படுவதில்லை. பல தொழிற்சாலைகளில் முதல் உதவி பெட்டிகளும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் எல்லையோர தொழிற்சாலைகளில் முறையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை