உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர்களுக்கு  கல்வி கடன் முகாம்  

மாணவர்களுக்கு  கல்வி கடன் முகாம்  

சிவகங்கை : கல்லுாரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு கல்வி கடன் முகாம் அக்.,29 வரை நடக்கும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இன்று (அக்.,10) காளையார்கோவில் புனித மைக்கேல் இன்ஜி., கல்லுாரி, அக்., 15 ல் இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லுாரி, அக்., 17 ல் திருப்புவனம் அருகே பொட்டப்பாளையம் கே.எல்.என்., இன்ஜி., கல்லுாரி, அக்., 22 ல் காரைக்குடி அழகப்பா அரசு இன்ஜி., கல்லுாரி, அக்., 24 ல் தேவகோட்டை ஆனந்தா கல்லுாரி, அக்., 29 ல் சிங்கம்புணரி, திருப்புத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும். கல்வி கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.inஎன்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, நகல், ஆவணங்களுடன் கல்வி கடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும். இதில் பங்கேற்கும் மாணவர்கள் விண்ணப்ப நகல், மாணவ, மாணவியர், அவர்களது பெற்றோரின் இரண்டு புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம் (இருவரின்), இருப்பிட சான்று, கல்லுாரி வழங்கிய கல்வி கட்டண உறுதி சான்று, கல்வி கட்டண விபரம், பத்து மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்று, இளநிலை படிப்பு மதிப்பெண் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்கலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி