மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
4 hour(s) ago
பயிற்சி முகாம்
4 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
4 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
4 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
4 hour(s) ago
சிவகங்கை: சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு பள்ளி கருத்தரங்கு கூடத்தில் பிப்., 15 அன்று கல்வி கடன் முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இங்கு செயல்பட்டு வரும் அனைத்து வங்கிகள் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் மருதுபாண்டியர் நகர் அரசு பள்ளி கருத்தரங்கு கூடத்தில், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும். கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ, மாணவிகள் www.vidyalakshmi.co.inஇணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து, சிறப்பு கல்வி கடன் முகாமன்று விண்ணப்ப நகல், உரிய சான்றுகளுடன் பங்கேற்க வேண்டும்.முகாமில் பங்கேற்கும் மாணவர்கள் விண்ணப்ப நகல், மாணவர், பெற்றோரின் இரண்டு புதிய போட்டோ, இருவரும் இணைந்த வங்கி கணக்கு புத்தகம், இருப்பிட, வருமான, ஜாதி சான்று நகல், பான் கார்டு, ஆதார் கார்டு நகல், கல்லுாரியில் இருந்து பெற்ற உண்மை சான்று, கல்வி கட்டண விபரம், மதிப்பெண் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெறலாம், என்றார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago