உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை தெரசாள் சர்ச்சில் மின் அலங்கார தேர் பவனி

மானாமதுரை தெரசாள் சர்ச்சில் மின் அலங்கார தேர் பவனி

மானாமதுரை : மானாமதுரை புனித குழந்தை தெரசாள் சர்ச் மின் அலங்கார தேர் பவனி, திருவிழா நிறைவு திருப்பலியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். கடந்த மாதம் 22ம் தேதி பாதிரியார் சார்லஸ் கென்னடி தலைமையில் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் மாலை சர்ச் வளாகத்தில் பங்கு இறை மக்கள் சார்பில் பாதிரியார்கள் பங்கேற்ற திருப்பலி நடைபெற்றது.செப். 29ம் தேதி மாலை 6:00 மணிக்கு நற்கருணை பவனியும், நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு திருப்பலி நடந்தது. தொடர்ந்து புனித குழந்தை தெரசாள் சொரூபம் மின் அலங்கார தேரில் ஏற்றப்பட்டு முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்தது. நேற்று மாலை 5:45 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி மறை மாவட்ட ஆயர் லுார்து ஆனந்தம் தலைமையில் நடை பெற்றது. ஏற்பாடுகளை பாதிரியார் சார்லஸ் கென்னடி மற்றும் பங்கு இறை மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை