உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடி அருகே 30 வீடுகளில் மின் மீட்டர் எரிந்தது

இளையான்குடி அருகே 30 வீடுகளில் மின் மீட்டர் எரிந்தது

இளையான்குடி; குமாரக்குறிச்சி அருகே வடக்கு குடியிருப்பில் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் மீட்டர் எரிந்தது. மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.குமாரக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட வடக்கு குடியிருப்பில் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் நேற்று உயர் அழுத்த மின்சாரம் காரணமாக மின் மீட்டர் மற்றும் ஒயர்கள் எரிந்தது. கிராம மக்கள் மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை தொடர்ந்து கிராம மக்கள், நாம் தமிழர் கட்சி செய்தி தொடர்பாளர் மனோஜ் மற்றும் நிர்வாகிகள் இளையான்குடியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ