மேலும் செய்திகள்
சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
30-Jul-2025
சிவகங்கை : பொதுமக்கள், ஊழியர்களை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை ரத்து செய்ய வலியுறுத்தி சிவகங்கையில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். சிவகங்கை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்ட தலைவர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். திட்ட செயலாளர் சுப்புராம் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் உமாநாத் சிறப்புரை ஆற்றினார்.திட்ட துணை தலைவர் கருணாநிதி, மண்டல செயலாளர் கோகுலவர்மன், இணை செயலாளர் மாரியப்பன் உட்பட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். பொருளாளர் டேவிட் செபஸ்தியான் நன்றி கூறினார். மக்கள், மின் ஊழியர்களை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை ரத்து செய்ய வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தம் ரத்து செய். பென்ஷனுக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
30-Jul-2025