உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஸ்கேன் வசதி இல்லாத அவசர சிகிச்சை பிரிவு

ஸ்கேன் வசதி இல்லாத அவசர சிகிச்சை பிரிவு

திருப்புத்துார்: திருப்புத்துார் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் ஸ்கேன் வசதி ஏற்படுத்த பொதுமக்கள் கோரியுள்ளனர். திருப்புத்துாரில் தாலுகா அளவிலான அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தற்போது துவக்கப்பட்டு செயல்படுகிறது. விபத்தில் அடிபட்டு வருபவர்களுக்கும், உடல்நிலை மோசமான நிலையில் வருபவர்களுக்கும் பரிசோதிக்க சிடி ஸ்கேன் வசதி தேவைப்படுகிறது. இந்த பிரிவில் அதற்கான அறை கட்டப்பட்டு உள்ளது. ஆனால் ஸ்கேனிங் உபகரணம் அமைக்கப் படவில்லை. இதனால் அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் மக்களுக்கு ஸ்கேன் செய்து உடனடியாக சிகிச்சை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் சிவகங்கைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்ப வேண்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை