உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சப் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

சப் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

தேவகோட்டை : சப்கலெக்டர் அலுவலக வளாக மரத்தில் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தேவகோட்டை நடராஜபுரம் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி 38., திருமணமாகி இரு மகள்கள் உள்ளனர். பெரியசாமி தேவகோட்டை சப்கலெக்டர் அலுவலகத்தில்ஆறு வருடங்களாக இரவு காவலராக பணியாற்றி வந்தார். பெரியசாமி குடும்பத்தில் சிறுசிறு பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என எழுதி வைத்து விட்டு சப் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தில் துாக்கிட்டு இறந்து போனார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !