உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர்களுக்கான கட்டுரை போட்டி ஜன., 23, 24ல் நடைபெறும்

மாணவர்களுக்கான கட்டுரை போட்டி ஜன., 23, 24ல் நடைபெறும்

சிவகங்கை : பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் ஜன.,23, 24ல் சிவகங்கையில் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளி வளாக கருத்தரங்கு கூடத்தில் ஜன., 23ல் பிளஸ் 1, 2 மாணவர்களுக்கும், ஜன., 24ல் கல்லுாரி மாணவர்களுக்கும் இப்போட்டி நடைபெறும். மாவட்ட அளவில் நடக்கும் இப்போட்டியில் வெற்றி பெற்றால் முதல் பரிசு ரூ.10,000, 2ம் பரிசு ரூ.7,000, 3ம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும். அரசு, உதவி பெறும், தனியார் பள்ளி, கல்லுாரி மாணவர்களும் பங்கேற்கலாம். பள்ளி, கல்லுாரிக்கு தலா 1 நபர் வீதம் 3 போட்டிகளில் ஒரு பள்ளி, கல்லுாரிக்கு 3 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டிக்கான தலைப்பு அன்றைய தினமே அறிவிக்கப்படும். தலைமை ஆசிரியர், கல்லுாரி முதல்வர் அனுமதி கடிதத்துடன் பங்கேற்க வேண்டும். பங்கேற்கும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பெயர் விபரங்களை ஜன.,20ம் தேதி மாலை 4:00 மணிக்குள் உதவி இயக்குனர், தமிழ் வளர்ச்சி துறை, சிவகங்கை அலுவலகத்திற்கு tamil gmail.comல் அனுப்பி வைக்கவும். மேலும் விபரத்திற்கு 04575- 241 487 ல் கேட்டு தெரிந்து கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி