உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மருத்துவ காப்பீடு திட்ட காலம் நீட்டிப்பு * அரசு ஊழியர், ஆசிரியர்கள் அதிருப்தி

மருத்துவ காப்பீடு திட்ட காலம் நீட்டிப்பு * அரசு ஊழியர், ஆசிரியர்கள் அதிருப்தி

சிவகங்கை:அரசு ஊழியர்களுக்கான மருத்துவ செலவு தொகை ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்த நிலையில், காப்பீடு திட்டத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்தது அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம் 2021 ஜூலை 1 ல் இருந்து 4 ஆண்டு ஒப்பந்தம் அமல்படுத்தினர். அரசு ஊழியர், ஆசிரியரிடம் மாதம் ரூ.300, ஓய்வூதியரிடம் ரூ.450 பிரீமிய தொகை பிடித்தம் செய்கின்றனர். இத்திட்டம் மூலம் பட்டியலில் உள்ள முக்கிய மருத்துவமனையில் சிகிச்சை செய்வோருக்கான செலவு தொகை காப்பீடு நிறுவனம் மூலம் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.இத்திட்டத்திற்கான ஒப்பந்த காலம் 2021 முதல் 2025 ஜூன் 30ல் முடிவடைகிறது. இந்நிலையில் ஒப்பந்த காலத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு (2026 ஜூன் 30 வரை) நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

* மருத்துவ செலவு ஒதுக்கீடு குறைவு:

அரசு ஊழியர்கள் கூறியதாவது: மருத்துவ காப்பீடு திட்டத்தில் எங்களுக்கு முதலில் செலவு தொகையில் 50 சதவீதம் தந்தனர். காலப்போக்கில் அது 25 சதவீதமாக (உதாரணத்திற்கு ரூ.1.45 லட்சம் செலவழித்தால், ரூ.31,000 தான் தருகின்றனர்) குறைந்து விட்டனர். காப்பீட்டிற்கான பிரீமிய தொகை செலுத்தி பயனில்லாமல் போகிறது. பட்டியலில் இருந்து பல முக்கிய மருத்துவமனைகளை நீக்கிவிட்டனர். ஊழியர்கள் சொந்த முயற்சியில் முக்கிய மருத்துவமனைக்கு சென்றால், பில் தொகையில் 20 சதவீதம் தான் தருகின்றனர். மருத்துவ செலவு தொகையில் 60 சதவீதத்தை வழங்க வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று மருத்துவ காப்பீடு திட்டத்தை மறுபரிசீலனை செய்யாமல், மேலும் அதே இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு ஆண்டு கால நீட்டிப்பு அளித்தது சரியல்ல, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி