உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பணம் பறித்தவர் கைது

பணம் பறித்தவர் கைது

சிவகங்கை: சிவகங்கை அருகே கருங்காலக்குடி அய்யம்பட்டி ரோட்டில் கிராவல் குவாரி செயல்பட்டது. இந்த குவாரியில் செந்தமிழ்நகர் பிச்சைபாண்டி மகன் துரைசிங்கம் 59 பணிபுரிந்தார். அவரிடம் மார்ச் 18 மாலை 4:15 மணிக்கு 5 பேர் கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து மிரட்டி அவர் பையில் வைத்திருந்த ரூ.47 ஆயிரத்து 500 பணத்தை பறித்து சென்றனர். துரைசிங்கம் நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து பணம் பறித்து சென்றவர்களை தேடிய நிலையில் ஏற்கனவே 4 பேரை கைது செய்தனர். இதில் தலைமறைவாக இருந்த காரைக்குடி ஆனந்த் என்ற முருகானந்தத்தை 21 தனிப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ