போலி மருத்துவம் போல் போலி விவசாயம் அறிவியல் அல்லாத விவசாயத்தை களைய அழைப்பு
காரைக்குடி: போலி மருத்துவம் போல் விவசாயத்திலும்போலி விவசாயம் உள்ளது. அறிவியல் விவசாயத்தை மக்களிடம் சொல்லவும், அறிவியல் அல்லாத விவசாயத்தை களையவும், விவசாய மாணவர்கள் போர் வீரர்களாக மாற வேண்டும் என முன்னாள் டி.ஜி.பி.,சைலேந்திரபாபு பேசினார். -காரைக்குடி அருகே உள்ள சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரியில் 4 மற்றும் 5ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.நிகழ்ச்சியில் முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பட்டங்களை வழங்கி பேசியதாவது: யு.பி.எஸ்.சி., தேர்வில் வேளாண் கல்லுாரி மாணவர்கள் அதிகம் தேர்வாகின்றனர். அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஒரு சதவீதம் பேர் தான் ஐ.டி., கட்டுகின்றனர். 90 சதவீத மக்கள் ஏழையாகவே உள்ளனர். நம் முன்னோர்கள் அடிமையாக வாழ்ந்துள்ளனர். இன்று உலகத்தில், அதிகமாக அரிசியை ஏற்றுமதி செய்வது இந்தியா. இந்தியாவில் விவசாயம் முன்னேற காரணம் விவசாய பல்கலை., வேளாண் துறை. மத்திய அரசு 80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு வழங்குகின்றனர். இஸ்ரேல் அறிவியல் விவசாயத்தில் சிறப்பாக விளங்குகிறது.வேளாண் மாணவர்கள்உயர்ந்த அரசு பதவிகளுக்கும் போகலாம். வேளாண் துறையிலும் சாதிக்கலாம். விவசாயத்திலும் சாதிக்கலாம். இயற்கை விவசாயம் நல்லது தான். ஆனால் 150 கோடி மக்கள் சாப்பிட இயற்கை விவசாயம்போதாது. போலி மருத்துவம் போல் போலி விவசாயமும் உள்ளது. அறிவியல் விவசாயத்தை மக்களிடம் சொல்லவும், அறிவியல் அல்லாத விவசாயத்தை களையவும், விவசாய மாணவர்கள் போர் வீரர்களாக மாற வேண்டும் என்றார். முன்னதாக கல்லூரி தாளாளர் சேது குமணன் தொடங்கி வைத்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டூலிப் மலர் எல்.எல்.சிஇயக்குனர் முகமது எகியா, உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை கல்லுாரி தலைவர் சந்திரசேகர் பேசினர். சேது வள்ளியம்மாள் அறக்கட்டளை செயலாளர் கோகிலம், சென்னை அம்பத்துார் சோகா இகெதா மகளிர் கல்லூரி துணை முதல்வர் கண்மணி, கல்லுாரி செயலர் கந்தம்பழம், தேனி மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் நாட்றயன், சிண்டிகேட் வங்கி முன்னாள் மேலாளர் பாரதி கலந்து கொண்டனர். முதல்வர் விஷ்ணு பிரியா ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் பேராசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.