மேலும் செய்திகள்
உழவரைத்தேடி வேளாண் திட்டம் தொடக்கம்
30-May-2025
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 24 கிராமங்களில் உழவரை தேடி வேளாண்மை திட்ட முகாம் நடைபெற்றது.குருந்தனி வாரியேந்தல் கிராமத்தில் நடந்த முகாமிற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினர். மேலச்சொரிக்குளத்தில் நடந்த முகாமில் தமிழரசி எம்.எல்.ஏ., திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் வேளாண் இடு பொருட்களை வழங்கினர். மித்ராவயலில் காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.சிங்கம்புணரி: பிரான்மலையில் மத்திய அரசு சார்பில் வளமான விவசாயி, நாட்டின் பெருமை வேளாண் வளர்ச்சி பிரசார இயக்க கூட்டம் நடந்தது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக விஞ்ஞானி ஆறுமுகநாதன் பருவ நிலை மாற்றம் மற்றும் முன்னெடுக்க வேண்டி யுக்தி குறித்து பேசினார். குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்துார்குமரன், பிரதமர் மோடியின் விவசாய திட்டங்கள், அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். உதவி இயக்குனர் பிரியா நன்றி கூறினார்.
30-May-2025