மேலும் செய்திகள்
தனி அடையாள எண் பெற கடைசி வாய்ப்பு
16-Mar-2025
காரைக்குடி: காரைக்குடி அருகே விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.பிரதமரின் கவுரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தடையின்றி ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு, பொது சேவை மையங்களில் விவசாயிகள்தங்களது அடங்கல், பட்டா உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்து, தனித்துவ அடையாள எண் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக மார்ச் 31 வரை கால அவகாசம் வழங்கினர். இருப்பினும் பெரும்பாலான விவசாயிகள் பதிவு செய்ய முடியவில்லை. இதனால், ஏப்., 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காரைக்குடி பகுதியில் உள்ள ஆத்தங்குடி, பலவான்குடி, ஆலத்துப்பட்டி உட்பட 5க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பதிவு செய்ய பொது சேவை மையங்களுக்கு சென்றால் முறையாக புல, பட்டா எண் சர்வரில் தேர்வு செய்ய முடியாததால், தனித்துவ அடையாள எண் பெற முடியாமல் தவிக்கின்றனர். இது குறித்து வேளாண் அதிகாரி கூறியதாவது:அரண்மனைபட்டி குரூப்பிற்கு உட்பட்ட கிராம விவசாயிகள் பதிய முடியாமல் சர்வரில் ஏற்படும் பிரச்னை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
16-Mar-2025