உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எஸ்.புதுாரில் காய்கறி கொள்முதல் மையம் விவசாயிகள் எதிர்பார்ப்பு

எஸ்.புதுாரில் காய்கறி கொள்முதல் மையம் விவசாயிகள் எதிர்பார்ப்பு

எஸ்.புதுார்: எஸ்.புதுாரில் காய்கறி கொள்முதல் மையம் அமைக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.மாவட்டத்தில் முக்கிய விவசாயப் பகுதியான இவ்வொன்றியத்தில் 1500 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர்.ஆண்டு முழுவதும் அந்தந்த பட்டத்திற்கு ஏற்றார் போல் மிளகாய், கத்தரி, தக்காளி, வெண்டை, புடலை உள்ளிட்ட காய்கறிகளை விளைவிக்கின்றனர். இங்கு விளையும் மிளகாய், அறுவடை காலங்களில் தினமும் 50க்கும் மேற்பட்ட லாரிகளில் ஒட்டன்சத்திரம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.இதே போல் கத்தரி, தக்காளி, வெண்டை உள்ளிட்டவை பொன்னமராவதி, மதுரை, திருச்சி உள்ளிட்ட சுற்றுவட்டார நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அறுவடை காலங்களில் இப்பகுதியில் முகாமிடும் இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் காய்கறிகளை குறைந்த விலைக்கு வாங்கிச் சென்று கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இதை தவிர்க்க ஒன்றியத்தில் அரசு சார்பில் காய்கறி கொள்முதல் மையம் அமைக்க தொடர்ந்து கோரிக்கை இருந்து வருகிறது. இதற்காக எஸ்.புதுார் ஊராட்சி சார்பில் 3 ஆண்டுகளுக்கு முன்பு இடம் ஒதுக்கப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.விரைவில் கொள்முதல் மையம் வரும் என்று அதிகாரிகள் தெரிவித்த நிலையில் இதுவரை வந்தபாடில்லை, விவசாயிகளின் கஷ்டமும் குறையவில்லை. எனவே விரைவில் இவ்வொன்றியத்திற்கு காய்கறி கொள்முதல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ