உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரூ.22.32 லட்ச நலத்திட்ட உதவி

விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரூ.22.32 லட்ச நலத்திட்ட உதவி

காரைக்குடி: தேவகோட்டை வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் நடந்தது. காரைக்குடி, தேவகோட்டை, கண்ணங்குடி, கல்லல், சாக்கோட்டை பகுதியை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம் வரவேற்றார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். பொது மேலாளர் ஜெயப்பிரகாஷ், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்துார் குமரன் பங்கேற்றனர். கூட்டத்தில் விவசாயிகள் மனுக்கள் வழங்கினர். அதற்குரிய நடவடிக்கைக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார். இதில், 26 விவசாயிகளுக்கு ரூ.22.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ