உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஊற்றெடுக்கும் கிணறுகளால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஊற்றெடுக்கும் கிணறுகளால் விவசாயிகள் மகிழ்ச்சி

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் கிணறுகளில் தண்ணீர் ஊற்றெடுத்து நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.இத்தாலுகாவில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவ மழையால் சிங்கம்புணரி பிரான்மலை, ஒடுவன்பட்டி உள்ளிட்ட பகுதி நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சில கண்மாய்கள் மறுகால் பாய்ந்தும் வருகிறது. பிரான்மலை, ஒடுவன்பட்டி அசரீரி விழுந்தான் மலைகளில் பெய்த மழை நீர் சுனைகள் வழியாக கசிந்து அடிவார கிராமங்களில் ஊற்றாக ஊறி ஓடுகிறது. சுற்றளவில் உள்ள கிணறுகள் இந்த ஊற்று நீரால் நிரம்பி வயல்வெளியில் பாய்ந்து ஓடுகிறது. மேலும் ஒடுவன்பட்டி ஊருணி உள்ளிட்ட குளங்களில், மழை நின்று பல நாட்களுக்குப் பிறகும் மறுகால் பாய்ந்து வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை