வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மின்பணியாளர்கள் வேலை செய்கிறார்களா இல்லையா என்றே தெரியவில்லை...கேவலமான துறை மின் துறை...
இளையான்குடி; இளையான்குடி அருகே முனைவென்றியில் ஏற்படும் மின்தடையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.முனைவென்றியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் இங்கு விவசாயிகள் நெல்,கரும்பு,வாழை,பருத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.இவர்களின் தேவைக்காக இலவச மின்சாரமும் வழங்கப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால் மாற்று டிரான்ஸ்பார்மர் வைக்கப்பட்ட நிலையில் அதுவும் பழுதாகி குறைந்தழுத்த மின்சாரமே வருவதால் பயிர்களுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.கடந்த ஒரு வாரமாக வீடுகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ள பகுதிகளிலும் தொடர்ந்து மின்தடை ஏற்படுவதால் நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மின்பணியாளர்கள் வேலை செய்கிறார்களா இல்லையா என்றே தெரியவில்லை...கேவலமான துறை மின் துறை...