உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மகன் திருமணத்தன்று உயிரிழந்த தந்தை

மகன் திருமணத்தன்று உயிரிழந்த தந்தை

திருப்புவனம் : திருப்புவனத்தில் மகனின் திருமணத்தன்று தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் அருகே அல்லிநகரம் அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராக இருப்பவர் சத்தியேந்திரன் 55, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி திருப்புவனம் வட்டார தலைவராக உள்ளார். இவரின் மகன் திருமணம் திருச்சியில் நேற்று முன்தினம் நடந்துள்ளது. மாலையில் மணமக்கள் ஒரு காரில் வர சத்தியேந்திரன் தனது காரில் உறவினர்களுடன் அவரே ஓட்டி வந்துள்ளார். திருப்புவனம் அருகே வரும் போது நெஞ்சு வலிப்பதாக கூறி காரை நிறுத்தியுள்ளார். மருத்துவமனை சென்ற போது உயிரிழந்துள்ளார். மகன் திருமணத்தன்று தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி