தேனீக்கள் கொட்டி தந்தை பலி தாய், மகன் உட்பட மூவர் காயம்
தேவகோட்டை: தேவகோட்டை கிருஷ்ணராஜபுரத்தில் வசிப்பவர் ஆரோக்கியசாமி. இவரது வீட்டில் மரத்தை வெட்ட உடப்பன்பட்டியை சேர்ந்த காளிமுத்து 55., வந்தார். நேற்று மதியம் மரத்தை வெட்டிய போது மரக்கிளை ஒன்று அருகில் உள்ள வீட்டில் விழுந்தது.அங்கிருந்த மரத்தில் இருந்து வெளியேறிய மலைத்தேனீக்கள் காளிமுத்துவை கொட்டின. வீட்டின் வெளியே நின்றிருந்த ராஜாமுகமது 65, அவரது மனைவி காதர்பாத் 60, மகன் சகுபர் 35, ஆகியோரை தேனீக்கள் கொட்டியது. இதில் நால்வரும் காயமடைந்தனர். ராஜாமுகமது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். காயமடைந்த தாயும் மகனும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். மரம் வெட்டிய முதியவர் காளிமுத்து தனியார்மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.