உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  தந்தை கண்டிப்பு: மகன் தற்கொலை

 தந்தை கண்டிப்பு: மகன் தற்கொலை

திருப்புத்துார்: திருப்புத்துாரில் தந்தை கண்டித்ததால் மனவருத்தத்தில் மகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு பவானிசாகர் இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ் குரூஸ். இவரது மகன் ஜோசப் குரூஸ்19. இவர்கள் கம்பி கட்டும் வேலை செய்பவர்கள். இவருடன் தந்தையும் சேர்ந்து திருப்புத்துார் சின்னதோப்பு தெரு பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் தங்கியிருந்து வேலை பார்த்தனர். நேற்று லாரன்ஸ் குரூஸ் மதுரைக்கு வேலையாக சென்று விட்டார். நேற்று காலை உடன் இருந்தவர்கள் பார்த்த போது கட்டடத்தில் கம்பியில் துாக்கிட்டு ஜோசப் குரூஸ் தற்கொலை செய்து கொண்டார். திருப்புத்துார் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் வாலிபரின் தந்தை திட்டியதால் மனவருத்தத்தில் இருந்தவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை