உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை 4 வழிச்சாலையில் நிறுத்தப்படும் சரக்கு லாரிகள் விபத்துக்கள் அச்சம்

மானாமதுரை 4 வழிச்சாலையில் நிறுத்தப்படும் சரக்கு லாரிகள் விபத்துக்கள் அச்சம்

மானாமதுரை : மானாமதுரை வழியாக செல்லும் நான்கு வழிச்சாலையில் நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது. மதுரையிலிருந்து பரமக்குடி வரை 4 வழிச்சாலையாகவும், பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரை இருவழிச்சாலையாகவும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் வரையும் நான்கு வழி சாலை அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தினந்தோறும் இந்த ரோட்டில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிற நிலையில் வெளி மாநிலங்களில் இருந்தும் ராமேஸ்வரத்திற்கு ஏராளமான யாத்ரீகர்களும், சுற்றுலா பயணிகளும் வாகனங்களில் வந்து செல்கின்றனர். எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ள இந்த சாலையில் மானாமதுரை பகுதியில் கடந்த சில வாரங்களாக ரோட்டின் ஓரங்களில் சரக்கு வாகனங்களை நிறுத்தி வைப்பதால் விபத்து அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. எனவே சரக்கு லாரிகளை அதற்கென ஏற்படுத்தப்பட்ட (டிராக் வே) இடங்களில் நிறுத்தி வைக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !