உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முதல்ல கரன்ட் கட் பண்றத நிறுத்துங்க உங்களுடன் ஸ்டாலின் முகாமில் குமுறல்

முதல்ல கரன்ட் கட் பண்றத நிறுத்துங்க உங்களுடன் ஸ்டாலின் முகாமில் குமுறல்

திருப்புவனம் : மடப்புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடங்கிய போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மனு கொடுக்க வந்த மக்கள் முதல்ல கரன்ட் கட் பண்றத சரி பண்ணுங்க என குரல் எழுப்பினர். தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் வருவாய்துறை, வேளாண் துறை உள்ளிட்ட 14 துறைகளில் பொதுமக்கள் கோரிக்கை தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகின்றன. மடப்புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்பட்டன. மக்களின் மனுக்கள் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட பின் சம்பந்தப்பட்ட துறையினர் மனுதாரரை அழைத்து விசாரணை நடத்தி தீர்வு கண்டனர். முகாம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 30 நிமிடத்திற்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கணினி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. தனியார் திருமண மகாலில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜெனரேட்டர் வசதி இல்லாததால் மின்சாரம் வரும் வரை காத்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் முதலில் கரன்ட் கட் பண்றதுக்கு தீர்வு காணுங்கள் என குமுறினர். மின்சாரம் வழங்கப்பட்ட பின் நடந்த முகாமில் 458 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன. முகாமில் கோட்டாட்சியர் விஜயகுமார், தாசில்தார் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை