மீன்வளத்துறை இயக்குனர் ஆலோசனை
சிவகங்கை: மாவட்டத்தில் 442 கண்மாய்களை ரூ.34.30 கோடியில் சீரமைக்கும் பணி குறித்து மீன்வளத்துறை இயக்குனர் கஜலட்சுமி ஆலோசனை கூட்டம் நடத்தினார்.கூட்டத்திற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். கூட்டத்தில் கண்மாய்கள் துார்வாருதல், சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கலெக்டர் பி.ஏ., (பொது) ரங்கநாதன், (வளர்ச்சி) ரமேஷ், (நிலம்) கீர்த்தனா மணி, காரைக்குடி மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.