உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாதவராயன்பட்டியில் மீன்பிடித் திருவிழா ஏராளமானோர் பங்கேற்பு

மாதவராயன்பட்டியில் மீன்பிடித் திருவிழா ஏராளமானோர் பங்கேற்பு

திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றியம் மாதவராயன்பட்டி கண்மாயில் நடந்த மீன் பிடித்திருவிழாவில் கிராமத்தினர் பங்கேற்று மீன்களை பிடித்துச் சென்றனர்.கோடை துவங்கி, கொளுத்தும் வெயிலில் கண்மாய்களில் நீர் வற்றத் துவங்கியதை அடுத்து திருப்புத்துார் ஒன்றிய கிராமக் கண்மாய்களில் கிராமத்தினர் மீன்பிடித் திருவிழாக்களை நடத்தி வருகின்றனர். நேற்று மாதவராயன்பட்டி கண்மாயில் பல்வேறு பகுதியிலிருந்து வந்த கிராமத்தினர் பங்கேற்றனர். கிராம தெய்வ வழிபாடு நடத்தி விட்டு காலை 9:00 மணிக்கு மீன்பிடித் திருவிழா துவங்கியது. ஊத்தா கூடை, கச்சா, கொசுவலை ஆகிய மீன்படி உபகரணங்களை கொண்டு கிராமத்தினர் கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை