கால்பந்து போட்டி: மாணவர் தேர்வு
இளையான்குடி: தேசிய அளவிலான 14 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டிக்கு தமிழக அணிக்கு இளையான்குடி அனிஸ் மெட்ரிக் பள்ளி 7ம் வகுப்பு மாணவர் முஹம்மது ஆரிஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர் டிசம்பரில் மத்திய பிரதேசத்திலுள்ள உமரியா மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேசிய போட்டியில் விளையாட உள்ளார். இவரை எஸ்.எம்.எப்.சி., தலைவர் ஹபீபுர் ரஹ்மான் கமருதீன்,இளையான்குடி மேல்நிலைப் பள்ளி விளையாட்டு துறை இயக்குநர் நுார் முகம்மது,விளையாட்டு ஆசிரியர் அசாருதீன், டாக்டர் சாகிர் உசேன் கல்லுாரி கால்பந்து ஆசிரியர் காஜா முஹைதீன் மற்றும் உடற்பயிற்சி இயக்குநர் காளிதாசன், அனிஸ் பள்ளி விளையாட்டு ஆசிரியர் கோபி மற்றும் பலர் பாராட்டி பரிசு வழங்கினர்.