கானாடுகாத்தானில் வெளிநாட்டு மாணவர்கள்
காரைக்குடி: அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் மூலம் சுற்றுலாத்துறை, கலை மற்றும் பண்பாட்டு துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை வருவாய்த்துறை உட்பட பல்வேறு துறைகளுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கனடா, தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மொரீஷியஸ் ,இந்தியா, பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 115 மாணவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் சிறப்புகளை அறிந்து கொள்ள வந்தனர். கானாடுகாத்தான் அரண்மனை கட்டட வேலைப்பாடு, பிரம்மாண்ட அறைகள், மர வேலைகள் உட்பட பலவற்றையும் கண்டு ரசித்தனர். இவர்களுக்கு பேரூராட்சி தலைவி உட்பட கோட்டாட்சியர், மாவட்ட சுற்றுலா அலுவலர்கள், தாசில்தார்கள் வரவேற்பு அளித்தனர். நேற்றும், தென்னாப்பிரிக்கா ,இந்தோனேஷியா ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து 99 மாணவர்கள் உட்பட 120 அயலகத் தமிழர்கள் வந்திருந்தனர். அவர்களை தாசில்தார் ராஜா வரவேற்றார்.