கால்வாயில் குப்பை தேக்கம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் மறவமங்கலம் பகுதிக்கு பெரியார் தண்ணீர் செல்வதற்காக முன்னாள் அமைச்சர் கண்ணப்பனாள் கால்வாய் கட்டப்பட்டது. இந்த கால்வாயில் 2018இல் அ.தி.மு.க., ஆட்சியில் சிவகங்கை தெப்குளத்திற்கு தண்ணீர் கொண்டுவந்து நிரப்பப்பட்டது. இந்த கால்வாய் மேலுார் பகுதியில் துவங்கி சிவகங்கை நகரின் வழியாக மறவமங்கலம் பகுதிக்கு செல்கிறது. இந்த கால்வாய் செல்லும் பகுதியில் ரோஸ் நகர், அழகு மெய்ஞானபுரம், முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளது. இந்த பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதி நகரின் மிக அருகாமையில் உள்ளது. இப்பகுதியில் குப்பைகளை சேகரிக்க நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. எனவே இந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை மருந்து குடோன் அருகில் செல்லக்கூடிய பெரியார் கால்வாயில் கொட்டுகின்றனர். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.