ஸ்டேஷன் வளாகத்தில் குவியும் குப்பை
மானாமதுரை; மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் வழியாக தினமும் 20 க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன.ஸ்டேஷன் வளாகத்தில் முதலாவது பிளாட்பாரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் குப்பை குவிந்து கிடப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதை தொடர்ந்து பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.பிளாட்பாரங்களில் ஆங்காங்கே நாய்களும் மாடுகளும் சுற்றித் திரிவதால் பயணிகள் அச்சத்துடன் பிளாட்பாரத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது. ரயில்வே நிர்வாகத்தினர் ஸ்டேஷனை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.