உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விபத்தில் சிக்கிய காஸ் சிலிண்டர் லாரி

விபத்தில் சிக்கிய காஸ் சிலிண்டர் லாரி

சிவகங்கை: சிவகங்கை மதுரை முக்கு அருகே கல்லுாரி ரோட்டில் காஸ் சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரியும் மண் அள்ளும் இயந்திரமும் மோதியதில் ஓட்டுனர்கள் உயிர் தப்பினர்.தேவகோட்டை அருகே கற்களத்துார் கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் இளையராஜா 43. இவர் நேற்று பொன்னமராவதியில் இருந்து காலி காஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு தாயமங்கலம் விலக்கு அருகே உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு சொந்தமான காஸ் நிரப்பும் மையத்திற்கு சென்றார்.வாகனம் சிவகங்கை கல்லுாரி ரோட்டில் வந்த போது பக்கவாட்டு ரோட்டில் வந்த மண் அள்ளும் இயந்திரமும் மோதிக்கொண்டது.இதில் மண் அள்ளும் இயந்திரத்தை ஓட்டிய டிரைவர் தர்மர் 21 மற்றும் காஸ் சிலிண்டர் வாகன டிரைவர் இளையராஜா அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். இந்த பகுதியில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை