மேலும் செய்திகள்
சிறுமியை திருமணம் செய்தவர் மீது வழக்கு
05-Oct-2024
சிவகங்கை:ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 32 வயது வாலிபருடன் அவரது ஊரில் உள்ள கோயிலில் கடந்த ஜூலை 12 ல் திருமணம் நடந்துள்ளது.சிறுமி இரண்டு மாதம் கழித்து இது குறித்த இளையான்குடி சமூக நல அலுவலரிடம் தெரிவித்தார். சமூக நல அலுவலர் விசாரித்தார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் வாலிபர் , அவரின் பெற்றோர் மீது குழந்தை திருமணம் தடை சட்டத்தில் இன்ஸ்பெக்டர் ஜெயக்கொடி வழக்குப் பதிவு செய்துள்ளார்.
05-Oct-2024