மேலும் செய்திகள்
அரசு பஸ் பழுது: பயணிகள் அவதி
27-Aug-2025
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே அரசு பஸ் மோதி, டூவீலரில் சென்ற சிறுமி பலியானார், கல்லூரி மாணவி படுகாயமடைந்தார். முறையூர் ஊராட்சி எம்.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகள் வயது 17, அப்பகுதி கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று தனது தங்கையுடன் டூவீலரில் மெயின் ரோட்டில் உள்ள பண்ணைக்கு பால் வாங்க வந்துள்ளார். அப்போது பழநியில் இருந்து காரைக்குடி வந்த அரசு பஸ், முன்னால் சென்ற மற்றொரு பஸ்சை முந்த முயன்ற போது கோவில்பட்டி விலக்கில் வந்து திரும்பிய டூவீலர் மீது அரசு பஸ் மோதியது. இதில் சிறுமி மீது பஸ் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார். காயமுற்ற மாணவி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
27-Aug-2025