உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தடுப்பில் மோதி இழுத்துச் சென்ற அரசு பஸ்

தடுப்பில் மோதி இழுத்துச் சென்ற அரசு பஸ்

காரைக்குடி:காரைக்குடியில் அரசு பஸ்சின் முன்பு தடுப்பு கம்பி சிக்கியது. அதனுடன் நீண்ட துாரம் சென்றதால் பயணிகள் அச்சமடைந்தனர்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலுள்ள வருமான வரித்துறை அலுவலக சாலை ஒரு வழிச்சாலையாகும். வாகனங்கள் உள்ளே செல்லாமல் இருக்க பேரிகேட் அமைக்கப்பட்டுள்ளது.திருச்சியில் இருந்து அரசு பஸ் காரைக்குடி வந்தது.வருமானவரித்துறை அலுவலகம் அருகே தடுப்பில் பஸ் மோதி நீண்ட தூரம் இழுத்துச் சென்றது. பொதுமக்கள் கூச்சலிட்ட பிறகே பஸ் நிறுத்தப்பட்டது.சம்பவத்தை பார்த்தவர்கள் கூறுகையில், பஸ்சில் பிரேக் பிடிக்கவில்லை.பேரிகேடில் மோதியதால் பஸ்வேகம் குறைந்து நிறுத்த முடிந்தது. பெரிய விபத்து தடுக்கப்பட்டது என்றனர்.போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், பஸ் நல்ல நிலையில் தான் உள்ளது.பிரேக் பிரச்னை இல்லை. டிரைவரின் கவனக்குறைவால் இது நடந்துள்ளது. டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !