உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிறுமி பலாத்கார வழக்கு அரசு ஊழியருக்கு சிறை

சிறுமி பலாத்கார வழக்கு அரசு ஊழியருக்கு சிறை

சிவகங்கை:போலி துப்பாக்கியைக் காட்டி மிரட்டி சிறுமியை பலாத்காரம் செய்த எஸ்.பி., அலுவலக பணியாளருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து, சிவகங்கை போக்சோ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் பாலாஜி, 44. இவர் மதுரை எஸ்.பி., அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக பணிபுரிந்தார். விடுமுறை நாட்களில் காரைக்குடிக்கு வந்த இவர், 2021ல், 7 வயது சிறுமியிடம் போலி துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பலமுறை பாலியல் தொல்லை கொடுத்தார்.காரைக்குடி மகளிர் போலீசார் பாலாஜியை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி கோகுல்முருகன் விசாரித்தார்.பாலாஜிக்கு சிறுமியை மிரட்டியதற்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை, பாலியல் பலாத்காரத்திற்காக 30 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, பாலியல் தொல்லைக்கு 30 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்தார்.தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். அபராதத் தொகையில் 46,000 ரூபாயை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கொடுக்கவும், சிறுமிக்கு அரசு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ