உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு ஊழியர்கள் சங்க ஆர்ப்பாட்டம்   

அரசு ஊழியர்கள் சங்க ஆர்ப்பாட்டம்   

சிவகங்கை: உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை நிலுவையின்றி வழங்க வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் சேவுகமூர்த்தி வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் சுரேஷ் மாவட்ட துணை தலைவர் முத்துக்குமார் , மக்கள் நல பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், இதயகண்ணன், அருள், இளஞ்செழியன் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர்கள் சங்க (ஓய்வு) மாவட்ட தலைவர் சங்கரசுப்பிரமணியன் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட துணை தலைவர் மகாலட்சுமி நன்றி கூறினார். ஜூலை முதல் அரசு அறிவித்த 3 சதவீத அகவிலைப்படியை நிலுவையுடன் வழங்க வேண்டும். தனியார் பல்கலை மசோதாவை அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !