அரசு வேலை, 3 சென்ட் நிலம் மனு அளித்தால் பரிந்துரை: கலெக்டர்
சிவகங்கை; திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் தம்பி, நவீன்குமாருக்கு வழங்கிய அரசு வேலை, 3 சென்ட் நிலம் குறித்து அவர் அதிருப்தி தெரிவித்திருந்தார்.இது குறித்து சிவகங்கை கலெக்டர் கே.பொற்கொடி கூறியதாவது: இறந்த அஜித்குமாரின் தம்பி நவீன்குமாருக்கு வழங்கிய அரசு வேலை, இலவசமாக கொடுத்த 3 சென்ட் நிலம் குறித்து ஆட்சேபணை இருந்தால், அது குறித்து என்னிடம் நேரடியாக அஜித்குமார் குடும்பத்தினர் மனு அளித்தால் தான் அம்மனுவை அரசுக்கு பரிந்துரை செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், தேளியில் அவருக்கு வழங்கப்பட்ட நிலம் எந்தளவிற்கு போக்குவரத்து வசதி உள்ளது. மேலும் சாத்தியமான இடம் வழங்கலாமா என்பது குறித்தும் கள ஆய்வு செய்து வருகிறோம், என்றார்.