உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இட நெருக்கடியில் தவிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்

இட நெருக்கடியில் தவிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்

எஸ்.புதுார்: எஸ்.புதுார் அருகே பள்ளி ஓட்டுக் கட்டடம் இடிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் இட நெருக்கடியில் தவிக்கின்றனர்.இவ்வொன்றியத்தில் மேலவண்ணாரிருப்பு கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 8ம் வகுப்பு வரை வகுப்பு நடைபெறும் நிலையில் இரண்டு கட்டடங்களில் 6 வகுப்பறை மட்டுமே உள்ளது. ஏற்கனவே இங்கு செயல்பட்டு வந்த ஓட்டு கட்டடம் பழுது காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்ட நிலையில் அதற்கு பதிலாக இதுவரை புதிய கட்டடம் கட்டப்படவில்லை. பெற்றோர்கள் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.இதனால் மாணவர்கள் இட நெருக்கடியில் அமர்ந்து படிக்கின்றனர். ஒரே வகுப்பறையில் வெவ்வேறு வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் போது ஆசிரியர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது.எனவே இப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி